புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரலையா? அப்போ இத செய்யுங்கோ

தற்போதுள்ள சூழ்நிலையில் நாம் பல விதமான பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகிறோம். இதில் பெரும் பிரச்சனையாக இருப்பது நமது உடல் நலம் குறித்த பிரச்சனையாகும். ஏனெனில் பணியின் காரணமாகவும் – பிற காரணத்திற்காகவும் நாம் மற்றும் நமது உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் நலனை பாதுகாப்பது போன்றவற்றை கண்டு கொள்ளாது இருந்து வருகிறோம்.

இதனால் பலரும் பலவிதமான பிரச்சனைக்கு உள்ளாகி வரும் நிலையில், இதனால் நமது உடலில் பல மாற்றமும் ஏற்பட்டு இருக்கும். அந்த மாற்றத்தில் தூக்கமின்மை பிரச்சனை இன்றுள்ள பெரும்பாலானோரால் கூறப்படும் செய்தியாக இருப்பது தான் பேரதிர்ச்சி.. தூக்கம் மற்றும் உடல் ஓய்வு என்பது கட்டாயமான மற்றும் அவசியமான ஒன்றாகும். மறுநாள் பணியை சுறுசுறுப்புடன் செய்வதற்கு தூக்கம் இன்றியமையாத ஒன்றாகும்.

நம்மில் பெரும்பாலானோர் தேநீர் அதிகளவு அருந்தும் பழக்கத்தை வைத்திருப்போம்.. தூக்கம் வந்தாலும் தேநீர் அல்லது கொட்டை வடியிலை நீர், தூக்கம் வரவில்லை என்றாலும் தேநீர் என்று அருந்திக்கொண்டு இருப்போம். தேநீர் மற்றும் கொட்டை வடியிலை நீரில் இருக்கும் காஃபைன் என்ற மூலப்பொருள் காரணமாக நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

இதனை அளவோடு அருந்தும் பட்சத்தில் நமது உடலுக்கு பிரச்சனை கிடையாது. இதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய பானங்கள் குறித்தும் நாம் அறிவது அவசியம்.. அந்த வகையில், தேநீர் மற்றும் கொட்டை வடியிலை நீர், சாக்லேட் மில்க்ஷேக், சோடா மற்றும் குளிர்பானம், மதுபானம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். மேற்கூறிய உணவுகள் அனைத்தும் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும்.

இரவு நேரத்தில் உறங்குவதற்கு முன்னதாக பால் குடிப்பது உடலுக்கும்., நல்ல உறக்கத்திற்கும் நல்லது. பாலில் இருக்கும் ட்ரிப்டோபான் பொருளின் காரணமாக மூளை செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற சஞ்சலத்தை அகற்றுவதால் நல்ல உறக்கம் நமக்கு கிடைக்கிறது. இரவு தூங்குவதற்கு முன்னதாக பால் குடிப்பது நல்லதாகும்.