இந்தக் கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான வசதி, மாணவர்களுக்கு படிப்பு வசதி, பீஸ், விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு தவிகள் செய்து பலருக்கும் இருப்பவர் நடிகர் சோனு சூட்.
அந்த வகையில் இவர் சமீபத்தில்
விபத்தொன்றில் ஒரு கால் இழந்துவிட்டதால் அவருக்கு செயற்கைக் கால் பொருத்த சுமார் 7 லட்சம் செலவாகுமென கூறியுள்ளனர். வறுமைநிலையிலுள்ள அவரால் அவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை எனவே சோனு சூட்டிடன் அவர் இந்த கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்த சோனு சூட், இந்த வாரத்தில் உனக்குப் புதிய கால் கிடைக்கும் என இளைஞனுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐநா சபை நடிகர் சோனு சூட்டின் சேவையைப் பாராட்டி அவருக்கு சிறப்பு மனித நேய விருதியை கடந்த திங்கட் கிழமை அளித்துள்ளது.
ஏற்கனவே இவ்விருதை லியானார்டோ டிகாப்ரியோ, கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம், நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பெற்றுள்ள நிலையில், நடிகர் சோனு சூட்டுக்குக் வழங்கப்பட்டுள்ளதால் பலரும் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.