மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பிக்காக அதிரடி முயற்சியில் இறங்கிய பிரபலம்!

பாடும் நிலா, வானம் பாடி என புகழப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி கடந்த செப்டம்பர் 25 ல் உடல் நலக்குறைவால் காலமானார்.

இசைக்கு மொழி ஒன்று தான் என்றாலும் 12 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதோடு கின்னஸ் சாதனை, தேசிய விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை பெற்று சாதனை படைத்திருந்தார்.

இறந்த போது அவருக்கு அரசு துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையோடு இறுதி சடங்கு செய்தது. நடிகர் விவேக், அர்ஜூன் ஆகியோர் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கூறினர்.

இந்நிலையில் தெலுங்கு மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எஸ்.பி.பியின் சாதனைகளை குறிப்பிட்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.