பிரபல நடிகை மீது போலிஸில் புகார்!

ஜெய் படத்தில் அறிமுகமானி வேட்டையாடு விளையாடு, போக்கிரி, மருதமலை, பரட்டை என்கிற அழகு சுந்தரம், வில்லு, சிறுத்தை என பல நடிகர்களின் படங்களில் நடித்தவர் முமைத் கான்.

ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் நடித்துள்ள இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 ல் போட்டியாளரும், பிக்பாஸ் சீசன் 2 ல் விருந்தினராகவும் கலந்து கொண்டார்.

அண்மையில் அவர் ஹைதராபாத்திலிருந்து கோவா செல்வதற்கான 4 நாட்களுக்கு வாடகை கார் புக்கிங் செய்திருந்தாராம். செல்லும் வழியில் டோல் கேட் உட்பட, ஹோட்டலில் தங்கும் செலவு என டிரைவரை செய்ய சொல்லி தான் பயணம் முடிந்ததும் தருகிறேன் என கூறிவிட்டு 7 நாட்கள் காரை பயன்படுத்தியதோடு பயணத்தின் முடிவில் ரூ 15 ஆயிரம் பில் தொகையில் ஒரு ரூபாய் இதுவரை கொடுக்கவில்லை. தன்னை ஏமாற்றிவிட்டார் என நடிகை முமைத் கான் மீது போலிசில் டாக்சி டிரைவர்கள் அசோசியேசன் மூலம் புகார் அளித்துள்ளாராம் அந்த டிரைவர் ராகவன் ராஜூ.