இந்த வருடம் யாராலும் மறக்க முடியாத ஒரு வருடமாகிவிட்டது. கொரோனா அனைவரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது.
பொழுதுபோக்காக நாம் நினைக்கும் சினிமா, சீரியல் வட்டாரத்தையும் பாடாய்படுத்தியுள்ளது இக்கொரோனா.
இதில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் உள்ளாகியுள்ளது. ஆனாலும் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஹிந்தியில் கடந்த சீசன் 13 ல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை மற்றும் பாடகி ஹிமான்ஷி குரானா. தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
அனைவரையும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தும் அவர் வேளாண் சட்டங்களை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.