பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 இந்த வாரம் முதல் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளது. போட்டியாளர்கள் யார் என்பதை காண பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள். சிலரின் பெயர் சொல்லப்பட்டு வந்தாலும் அவர்களே நாங்கள் இதில் கலந்துகொள்ளவில்லை என கூறிவருவது அதிர்ச்சியளித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சீசன் 3 ல் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி அண்மையில் பேட்டி ஒன்றில் ஒருவருடமாக என்னுடைய சம்பளத்தை கொடுக்கவில்லை. இதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு காரணம் ஆதவரற்ற குழந்தைகளின் அறுவை சிகிச்சை செலவுக்காகத்தான். உங்களின் தவறான வாக்குறுதிகளை நான் எப்போதும் நம்பியதில்லை. இதன் நான் எதிர்பார்க்கவும் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் தற்போது அத் தொலைக்காட்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ஒப்பந்தத்தின் படி எல்லோருக்கும் சரியான முறையில் சம்பளம் கொடுத்துவிடுவோம். பிக்பாஸில் கலந்துகொண்டதற்கான தொழில்முறை சம்பளம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கஸ்தூரிக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. ஜி.எஸ்.டி முறையில் சிக்கல் இருப்பதால் வரித்தொகையை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறோம். அதற்கான ஆவணங்களை கஸ்தூரி அளிப்பார் என காத்திருக்கிறோம். அவர் அதை ஒப்படைத்தபின் அதற்கான தொகையையும் கொடுத்துவிடுவோம். மற்றொரு நிகழ்ச்சிக்கான கட்டண விவரத்தையும் அவர் கொடுக்கவில்லை. இதனால் தொகையை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.