அதிகமாக காபி குடிப்பதால் இரத்தத்தில் காஃபின் அளவு அதிகமாகி ஏகப்பட்ட பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
எனவே காபியை எடுத்துக் கொள்ளும் அளவு தெரிந்திருக்க வேண்டும்.
அதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
- நீங்கள் தரமற்ற காபியை பருகும் போது அது நச்சுத்தன்மை உடையதாக இருக்கலாம். இது நோய், தலைவலி அல்லது மோசமான உணர்வுகளை உங்களுக்கு தரலாம்.
- இது அழுகிப் போன காபி கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காபி பொடியால் நேரலாம். எனவே எப்பொழுதும் உயர் தரமான, சிறப்பான காபி பொடியை பார்த்து வாங்குங்கள்.
- 80-100 கப் (23 லிட்டர்) காபி குடித்தீர்கள் என்றால் இந்த அதிகப்படியான காபி உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
- இது நம் உடலில் 10-13 கிராம் காபினை சேர்க்கிறது. இந்த டோஸ் அதிகமாகும் போது உங்களுக்கு வாந்தி ஏற்படலாம்.
- சில 23 லிட்டர் வரை வாந்தி எடுக்க நேரிடலாம். இந்த அளவு உங்களை கொல்லக் கூடிய அளவு ஆகும்.
- காஃபினின் அதிகப்பட்ச பரிந்துரை அளவு 400 மி. கி ஆகும். இது 4 கப் காபிக்கு சமம். ஒரு வேளை உங்களுக்கு காபி ஒத்துக்கொள்ள வில்லை என்றால் கவனமாக இருங்கள். உங்க உடம்பிற்கு ஏற்ற காபியை தேர்ந்தெடுப்பது அவசியம்.
- உண்மையில் மனிதன் எடுத்துக் கொள்ளும் பாதுகாப்பான காஃபின் அளவு என்பது அவரவர் டி.என்.ஏவை பொருத்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.