பிறக்கும் போதே உயிரிழந்த குழந்தை- சோகமான பதிவை வெளியிட்ட பிரபலமான ஜோடி
இந்த 2020ம் வருடம் இன்னும் எத்தனை துன்பங்களை மக்களுக்கு கொடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. அன்றாடன் ஒரு இறப்பு செய்தி வெளியாகி மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
இப்போதும் அப்படி ஒரு தகவல், என்னவென்றால் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் லெஜன்ட் என்பவருக்கு பிறக்க இருந்த 3வது குழந்தை வயிற்றிலேயே இறந்துள்ளது.
சோக செய்தியை அவரது மனைவி கிரிஸ்ஸி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கருப்பு-வெள்ளையில் பதிவு செய்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்களின் இந்த சோக செய்திக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்,