அரசியல் வட்டாரத்தை ஆட்டம் காணவைத்த புரட்சி! மறக்க முடியாத சாதனை!

விஜய்யின் படங்கள் என்றால் எப்போதும் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதுண்டு. அதிலும் படத்திலிருக்கும் சில விசயங்கள் அரசியல் சர்ச்சையாவதும் உண்டு,

அவ்வகையில் அவரின் பல படங்களை எடுத்துக்காட்டாக கூறினாலும் மெர்சல், சர்க்கார் ஆகிய படங்கள் சந்தித்த சர்ச்சைகளை மறக்க முடியுமா.

அரசின் இலவச திட்டங்களை தூக்கி தீயிலிடும் காட்சி படத்தில் இருக்க சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மத்தியில் பிரச்சனை உருவெடுத்தது.

முருகதாஸ் இயக்கத்தில் வந்த இப்படத்தில் ஓட்டுரிமை, கள்ள ஓட்டை கண்டுபிடிப்பது என முக்கிய சட்டம் ஒன்றை வெளியே தெரிய செய்து நாட்டை திரும்பி பார்க்க வைத்தது எல்லாம் ஒரு விதத்தில் புரட்சி என்றே சொல்லவேண்டும்.

அதே வேளையில் ஒரு விரல் புரட்சியே என ரஹ்மான் இசையிலும் குரலிலும் வந்த இப்பாடல் வெளியாகி நேற்றுடன் 2 ஆண்டை எட்ட ரசிகர்கள் டேக் போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

Youtube ல் இப்பாடல் லிரிக் வீடியோ 13 மில்லியன் பார்வைகளையும், பாடல் வீடியோ 3.8 மில்லியன் பார்வைகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.