தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பெரிய நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். இவரின் படங்கள் வந்தாலே தமிழ்நாடு முழுவதும் திருவிழா கோலம் தான்.
அதுவும் முதல் நாள், முதல் காட்சி அமர்க்களம் இருக்குமே அதெல்லாம் இந்த கொரோனாவால் இனி நடக்குமா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் விஜய்யின் உதயா படம் தயாரித்த பிரமிட் நடராஜன் அப்படத்தால் அதிக நஷ்டத்தை சந்தித்தாராம். அதுகுறித்து அண்மையில் அவர், ஓரளவு பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் தான், ஆனால் நஷ்டம்.
ஆனால் படத்தை வெளியிடுவதற்கு முன்னரே தளபதி விஜய் தான் நடித்து ரெடியாக இருக்கும் இன்னொரு படத்தை வெளியிட்டு விட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என கூறினாராம்.
அந்த படம் வெற்றி பெற்றால் இந்த படத்தின் வியாபாரம் இன்னும் அதிகமாகும் என விஜய் சொன்னதைக் கேட்காமல் அந்த படத்தை வெளியிட்டு பல கோடி நஷ்டம் அடைந்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.