பிக்பாஸில் ஆட்டம் போடும் தேனடைஸ் – கலக்கல் ப்ரோமோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கலை நிகழ்ச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என யூகிக்கப்பட்ட பட்டியலில் இருந்தவர்களே பெரும்பாலும் இருந்தனர். ஆர்ஜே அர்ச்சனா, அனிதா சம்பத் உள்பட ஒரு சிலர் மட்டுமே யூகிக்கப்பட்டவர்களில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சற்றுமுன் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் எல்லோரும் தூங்கி எழுந்து எனர்ஜியாக கார்டன் ஏரியாவில் வாத்தி கம்மிங்ப்பாடலுக்கு நடனமாடி நாளை துவங்கியுள்ளனர். ஷிவானி எப்போதும் போலவே கிளாமர் உடையில் கில்மா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து செம குத்தாட்டம் போட விஜய் டிவி கேமரா அவரையே focus செய்து காட்டுகிறது.