பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் மூன்று போட்டியாளர்கள் அறிமுகம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று சரியாக 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வரை 3 போட்டியாளர்கள் இதுவரை அறிமுகம் ஆகி உள்ளனர்
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்த ரியோ ராஜ் மற்றும் சனம்ஷெட்டி ஆகிய இருவரும் கமல்ஹாசன் முன் அறிமுகமானார்கள். முதல் போட்டியாளராக ரியோராஜ், இரண்டாவது போட்டியாளராக சனம்ஷெட்டி அறிமுகமாகிய நிலையில் தற்போது மூன்றாவது போட்டியாளராக நடிகை ரேகா அறிமுகமாகி உள்ளார்
இந்த மூன்று போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமலஹாசனுடன் இவர்கள் மூவரும் பேசி தங்களது பிக்பாஸ் எதிர்பார்ப்பையும் அனுபவங்களையும் தெரிவித்தனர். இவர்கள் மூவரில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்