விஸ்வரூபம் படத்தை முதலில் இயக்க இருந்தது இவர்தானா?

கமல்ஹாசன் எதிலும் எப்போதும் புதுமையை வெளிப்படுத்தும் ஒரு நபர்.

அவரது படங்கள் எடுத்தாலே தெரியும் படம் நடித்தோம், பாட்டுக்கு நடனம் ஆடினோம் என்றில்லாமல் புதுமையான விஷயத்தை தனது படத்தில் காட்ட விரும்புவார், அப்படி சில விஷயங்களை தமிழ் சினிமாவிற்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அப்படிபட்ட அவர் நிறைய போராட்டங்களுக்கு இடையில் இயக்கிய படம் தான் விஸ்வரூபம். 2013ம் வருடம் வெளியான இப்படம் சந்திக்காத பிரச்சனை இல்லை, சவால்கள் இல்லை.

இதையெல்லாம் கடந்து படமும் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள இப்படத்தை முதலில் இயக்க இருந்தது செல்வராகவன் அவர்கள் தான்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்தில் இருந்து நீங்க பின் கமல்ஹாசனே இயக்கியிருக்கிறார்.