சென்னை அணியின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி!

13 வது ஐபிஎல் சீசன் தொடரில் நேற்று நடந்த 18வது ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று துபாயில் இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஷேன் வாட்சன் – டு ப்லஸ்ஸி ஜோடி ஆரம்பம் முதல் வெற்றி வரை அதிரடியாகவும், நிதானமாகவும் மைதானத்தை தெறிக்க விட்டனர்.

முதல் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து ஆடிய மூன்று ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. நேற்று ஆடிய ஐந்தாவது ஆட்டத்தில் சென்னை அணி அபாரமாக ஆடி மிகப்பெரிய ஒரு வெற்றியை எடுத்து உள்ளது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் சென்னை அணி கடைசி இடத்திலிருந்து 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அணிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி புள்ளிகள் நெட் ரன்ரேட்
மும்பை 5 3 2 6 +1.214
தில்லி 4 3 1 6 +0.588
பெங்களூர் 4 3 1 6 -0.954
கொல்கத்தா 4 2 2 4 -0.121
ராஜஸ்தான் 4 2 2 4 -0.317
சென்னை 5 2 3 4 -0.342
ஹைதராபாத் 5 2 3 4 -0.417
பஞ்சாப் 5 1 4 2 +0.178