உங்கள் புகைப்படங்களை திருடும் இந்த 17 ஆப்-களை உடனே நீக்குங்கள்!

கலிபோர்னியாவை சேர்ந்த ஐடி பாதுகாப்பு நிறுவனமான ஸ்கேலர் நடத்திய ஆராய்ச்சியில், நமது தொலைபேசியில் டவுன்லோட் செய்யும் செயலிகளின் உள்ள அனுமதி பட்டியலை கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 17 செயலிகளை நீக்கியுள்ளது. அந்தப் பதினேழு செயலிகளும் ஜோக்கர் தீம் பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டைல் ஃபோட்டோ கோலேஜ், மெட்டிகுலஸ் ஸ்கேனர், பேப்பர் டாக் ஸ்கேனர், ப்ளூ ஸ்கேனர், ஹம்மிங்பேர்ட் PDF C உள்ளிட்ட  17 செயலிகளில் நீங்கள் ஏதேனும் ஒரு செயலியை உங்களது மொபைலில் பயன்படுத்தி இருந்தால், உடனடியாக நீக்கி விடுங்கள்.

ஏனெனில் ஜோக்கர் தீம்பொருள் பிரீமியம் கட்டண சந்தா செலுத்துவதன் மூலம் நமது பணத்தை அவர்கள் திருட செய்யலாம். மேலும் நமது அழைப்புகள், குறுஞ்செய்திகள், சாதனத்தில் உள்ள புகைப்படங்கள் மற்ற விஷயங்களை இவர்கள் திருடி கொள்ளலாம். ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட அந்த 17 சிலைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் உங்கள் தொலைபேசியில் இருந்தால் அதனை உடனே நீக்கம் செய்யவும்.

Meticulous Scanner
Desire Translate
Talent Photo Editor – Blur focus
Care Message
All Good PDF Scanner
Mint Leaf Message – Your Private Message
Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
Tangram App Lock
Direct Messenger
Part Message
Paper Doc Scanner
Blue Scanner
Private SMS
One Sentence Translator – Multifunctional Translator
Style Photo Collage
Hummingbird PDF Converter – Photo to PDF
All Good PDF Scanner