தர்ஷன் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்கு!

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவர் தர்ஷன் என்பது தெரிந்ததே. இவர் அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் பார்வையாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தர்ஷன் மீது நடிகை சனம் செட்டி அதிரடியாக புகார் ஒன்றை அளித்தார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறியதாகவும், திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்

இது குறித்து சனம்ஷெட்டி காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சனம் செட்டி நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி 4 வது சீசனில் கலந்து கொண்டுள்ளார்

இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தர்ஷன் மீது நான்காவதாக ஒரு பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலும் தர்ஷனை விசாரணை செய்ய காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது