தளபதி 65 படத்தின் செம்ம மாஸ் Breaking அப்டேட்..!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் 4ஆம் முறையாக நடிக்கவிருக்கும் படம் ‘தளபதி 65’. ஆம் துப்பாக்கி, கத்தி, சர்கார் படங்களை தொடர்ந்து, இந்த வெற்றி கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், இவை அனைத்துமே உறுதியான தகவல் தான்.

இந்நிலையில் தர்பார் படத்தின் தோல்விக்கு பிறகு ஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக மிகவும் முழு மூச்சுடன், தளபதி 65 படத்தின் திரைக்கதையில் தனது கவனத்தை செலுத்தி வருகிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒரு கதாபாத்திரம் கதாநாயகனாகவும், மற்றொரு கதாபாத்திரம் வில்லனாகவும் நடிக்கிறாராம் விஜய்.

மேலும் இப்படத்தில் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்டபடி தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கினால் கண்டிப்பாக அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் அடுத்த வரும் விஜய்யின் ரசிகர்களுக்கு மாஸ்டர் { பொங்கல் } மற்றும் தளபதி 65 { தீபாவளி } என இரு திரை விருந்துகள் காத்துக்கொண்டிருக்கிறது.