மிக எளிமையாக திருமணத்திற்கு வந்த தளபதி விஜய், தொகுப்பாளினி அஞ்சனா திருமணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு..!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய், இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய்.

இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர், மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியிடு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பபடுகிறது.

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி அஞ்சனா அவரின் திருமணத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து கூறியுள்ளார்.

“தனது திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப் பட்டதாகவும், அவர் ஆடம்பரமான காரில் வருவார் என நினைத்தோம், ஆனால் அவர் சிறிய காரில் எளிமையாக வந்தார்” என தெரிவித்துள்ளார்.