மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தது குறித்து முதல்முறையாக மனம் திறந்த விஜய் சேதுபதி..!!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர், இவரின் திரைப்படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான க.பெ.ரணசிங்கம் திரைப்படம் OTT-யில் வெளியாகி சிறந்த விமர்சங்களை பெற்று வருகிறது.

மேலும் தளபதி விஜய்யுடன் இவர் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

“எல்லோருக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. அதை ஒழிக்க எல்லோருக்கும் வழிகிடைக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடிக்கும் போது அந்த அழுக்கை வெளியே கொண்டு வர வழி கிடைக்கிறது.

நான் கொடூரமான கேங்க்ஸ்டராக நடிக்கிறேன். ஆனால் அதை முழுக்க ரசித்து நடித்தேன்” என விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.