கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை சோதிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நடிகை அமலா பால் சமூகவலைதளத்தில் ‘ஒரு கொரோனா சோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் 4500 ரூபாய் வசூலிக்கிறார்கள். கொரோனா சோதனைதான் புதிய கீமோதெரபி (புற்றுநோயாளிகளுக்கு செய்யப்படும் சிகிச்சை)’ எனத் தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பது குறைந்தபாடில்லை.