டிவி சானல் நடிகர் கைது! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் சீரியல், சினிமா படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கொரோனா பரவலால் கேரளாவின் சில இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள சினிமா, சீரியல் வட்டரங்கள் இரண்டிலும் இன்னும் சர்ச்சைகள் ஓடுக்கொண்டிருக்கின்றன. தற்போது டிபி சானல் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் சுபு, தங்கை முறை உறவிலான பெண்ணை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் அப்பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

இந்நிலையில் அப்பெண்ணை கணவரிடமிருந்து பிரிக்க அப்பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து ஆபாச படமாக மாற்றி அப்பெண்ணின் கணவருக்கு அனுப்பியதோடு, மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பிதாக சொல்லப்படுகிறது.

மேலும் பெண்ணின் உறவினர்களுக்கும் அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைக்க, இச்சம்பவத்திற்கு தன் கணவரே காரணம் என நினைத்து அப்பெண் பிரிந்து சென்று தனியே வாழ்ந்துள்ளார்.

பின் விசாரணையில் அந்த புகைப்படங்கள் அனுப்பிவைக்கப்பட்ட மொபைல் எண் சுபுவின் நண்பரான அந்த நடிகருடையது என தெரியவந்துள்ளது. மேலும் சுபு தானே இப்படியான வேலைகளை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனால் நடிகர், சுபு உட்பட 3 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.