முதலில் வெளியேறுவது சனம்ஷெட்டியா? சம்யூக்தாவா? நாமினேஷன் விபரம்

முதலில் வெளியேறுவது சனம்ஷெட்டியா? சம்யூக்தாவா?பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் இந்த வாரம் முதல் வாரம் என்பதால் நாமினேஷன் பிராசஸ் இல்லை. ஆனால் அடுத்த வாரம் நாமினேஷன் உண்டு என்பதும் நாமினேஷன் சிக்கியவர்களில் ஒருவர் பார்வையாளர்களின் வாக்கெடுப்பின்படி குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் அடுத்த வார நாமினேஷன் உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டுள்ளார், சனம்ஷெட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா மற்றும் ரேகா ஆகியோர் தான் அந்த நான்கு பேர்கள்

ரேகா ஆரம்பம் முதலே கலகலப்பாக இருப்பவர் என்பதால் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்று உள்ளார். அதேபோல் மிகவும் கேப்ரில்லாவுக்கு முதல் நாளே ஆர்மி ஆரம்பித்து கொண்டாடும் அளவுக்கு ரசிகர்கள் இருப்பதால் அவரும் வெளியேற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் முதலே நடிப்பதாக பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் சனம்ஷெட்டி வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இரண்டு நாட்கள் ஆகியும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருக்கும் சம்யுக்தாவும் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே முதல் நபராக இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவது அல்லது சனம்ஷெட்டியா? அல்லது கேப்ரில்லாவா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்