சண்டைக்காட்சியின் போது ஏற்பட்ட பெரிய விபத்து- ரத்தக் கசிவு, ICUவில் சோகமான நிலையில் பிரபலம், அதிர்ச்சியில் ரசிகர்கள்

மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் டொவினோ தாமஸ். படத்தின் கதைக்காக தன்னை எந்த நிலைக்கும் மாற்றக் கூடியவர்.

அப்படி அவர் தனது படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையையும் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

அதாவது இவர் காலா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்துள்ளார். அப்போது படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் நடித்த வயிற்றில் அடி பட்டிருக்கிறது, வலியில் துடிதுடித்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் தற்போது ICUவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம்.

இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், நடிகர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்து வருகின்றனர்.

இவர் தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.