சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இதோ..

சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகராக விளங்குபவர், அனைத்து தரப்பான ரசிகர்களும் இவரின் திரைப்படங்களை ரசிப்பார்கள்.

மேலும் இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது.

அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ரகுமான் இசையில் தும்பி துள்ளல் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள திலீப் சுப்ராயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து, கோப்ரா திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதை நடிகர் விக்ரமின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.