நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் பிரபல ஸ்டண்ட் பயிற்சியாளரின் மகன், யார் தெரியுமா?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர். இவரை தமிழ் ரசிகர்கள் பலரும் லேடி சூப்பர்ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.

இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார், தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT தளத்தில் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

மேலும் தற்போது இவர் தனது காதலனான விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளிலில் சுற்றித்திரிந்து சமீபத்தில் தனி விமானத்தில் சென்னை வந்தனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது அடுத்த திரைப்படத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் அப்படத்தை பிரபல ஸ்டண்ட் பயிற்சியாளரான ராம்போ ராஜ்குமார் அவர்களின் மகன் நவகாந்த் என்பவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.