தளபதி விஜய்க்கு மகனாக நடித்தவர், தல அஜித்தின் படத்தில் நடிக்கவுள்ளார்..வெளியான சூப்பர் தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல்.

இப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றதோடு, மிக பெரிய அளவில் வசூல் சாதனையும் புரிந்தது.

மேலும் இப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியில் தளபதி விஜய்யின் மகனாகவும், சிறுவயது விஜய்யாகவும் நடித்தவர் தான் அக்சத் தாஸ் என்ற குழந்தை நட்சத்திரம்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் விரைவில் தல அஜித்துடன் நடிப்பதாக கூறியுள்ளார், எனவே இவர் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.