ஸ்மார்ட் கைப்பேசி பயனர்களுக்கு கூகுள் தரும் மகிழ்ச்சியான செய்தி..!!

பட்ஜட் விலையிலான ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு Android Go எனும் இயங்குதளத்தினை கூகுள் அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இவ்வாறான கைப்பேசிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் நிறுவனம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி Night Mode வசதியானது குறித்த கைப்பேசிகளில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியின் ஊடாக குறைந்தளவு வெளிச்சத்திலும் உயர் தரம் மிக்க புகைப்படங்களை எடுத்து மகிழ முடியும்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலானது Android டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ் வசதியானது Nokia 1.3, Wiko Y61 மற்றும் Wiko Y81 ஆகிய கைப்பேசிகளில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.