திருமணத்திற்கு சாதாரணமாக எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த விஜய்..!!!

நடிகர் விஜய் எப்போதும் மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்டவர். ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்தாலும் தனது ரசிகர் தன்னிடம் இதை எதிர்ப்பார்க்கிறார் என்பதை தெரிந்து கொண்டாலோ உடனே உதவக் கூடியவர்.

அப்படி அவர் தமிழ்நாட்டில் எத்தனையோ பேருக்கு உதவிகள் செய்துள்ளார். அதேபோல் பிரபலங்கள், ரசிகர்கள் திருமணத்திற்கு அழைப்பு வந்தால் அவர்களை மதித்து நிகழ்ச்சிக்கு செல்வார்.

தொகுப்பாளினி அஞ்சனா விஜய்யின் தீவிர ரசிகை, திருமணத்திற்கு தளபதியை அழைத்திருக்கிறார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஞ்சனா எதிர்ப்பார்க்காத நேரத்தில் வேகமாக மேடைக்கு வந்திருக்கிறார்.

வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அஞ்சனா ஒரு பேட்டியில், திருமணத்திற்கு தளபதி விஜய் வருவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் திடீரென என்ட்ரி கொடுத்து எங்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார்.