பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய முழுவதிலும் பிரபலமான நடிகர் பிரபாஸ், இவரின் திரைப்படங்களுக்கு இந்தியளவில் வரவேற்பு உண்டு.
அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சாஹா திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது, ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதனை தொடர்ந்து ராதே ஷாம் திரைப்படமும் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது, அதில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார்.
இந்நிலையில் அடுத்ததாக இவர் நடிக்கவுள்ள பிரம்மாண்ட திரைப்படத்தின் அப்டேட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கின்றார். இதனை நடிகையர் திலகம் திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார்.
There's going to be a BIG announcement tomo mrng at 10 AM. Waiting! #Prabhas @deepikapadukone @nagashwin7 @AshwiniDuttCh @SwapnaDuttCh @VyjayanthiFilms pic.twitter.com/P7eHClkvgY
— Kaushik LM (@LMKMovieManiac) October 8, 2020