நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் இந்தியளவில் கவனம் பெற்றதோடு பல மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.
மேலும் இவர் நடித்துள்ள ஜகமே தனத்திரம் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது, அதுமட்டுமின்றி கர்ணன் திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் நடிக்கவுள்ள பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் நடிகர் தனுஷ்.
காரைக்குடியில் நடைபெறும் இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டையில் வந்துள்ளார் தனுஷ்.