பையா படத்தில் தமன்னா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

தமிழில் 2010ம் ஆண்டு லுங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் பையா. முழுக்க முழுக்க பயணம் செய்வதிலேயே கதை நகர்ந்துள்ளது.

கார்த்தி-தமன்னா ஜோடி பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது, அதோடு பாடல்கள் பற்றி கூறவே வேண்டாம். யுவனின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.

இந்த பட அனுபவம் குறித்து லிங்குசாமி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசும்போது, இப்படத்தின் நாயகியாக நடிக்க வைக்க நயன்தாராவிடம் தான் பேசினோம். ஆனால் சம்பளம் பிரச்சனை காரணமாக அவரால் படத்தில் நடிக்க முடியவில்லை, அதன் பின்னரே தமன்னா கமிட்டானார்.

இப்போதும் நயன்தாராவுக்கு இப்படத்தில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. வருங்காலத்தில் நல்ல கதை அமைந்தால் நாங்கள் மீண்டும் இணைவோம் என்றிருக்கிறார்.