பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சென்ற வாரம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு, ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் தினமும் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அதில் எந்த போட்டியாளரின் கதை ஊக்கப்படுத்தும் வகையில் இல்லையோ, அவர்களை எலிமினேஷனில் நாமினேட் செய்யுமாறு பிக்பாஸ் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, ஆஜீத் உள்ளிட்டோரை சம்யுக்தா நாமினேட் செய்கிறார்.