சூரரை போற்று திரைப்படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கியவர், இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் மாதவன், தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக மகளிர் மட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார், தற்போது இவர் ராகேட்ரி மற்றும் மாறா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மாறா திரைப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி அன்று OTT-யில் வெளியாகிவுள்ளது.

இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தியுள்ளார், அப்போது ரசிகர் ஒருவர் “சூரரை போற்று திரைப்படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?” என கேட்டுள்ளார்.
இதற்கு நடிகர் மாதவன் “Mind Blowing” என்ற பதிலை அளித்துள்ளார், இதனால் சூர்யா ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.