ஈழ தமிழ் பாடகிக்கு வாய்ப்பு கொடுத்த அசத்திய இசையமைப்பாளர் டி இமான்

பிரபல மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் லாபம்.

இந்த படத்தில், ஹீரோவாக விஜய் சேதுபதியும், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஜெகபதிபாபு, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராப் பாடல் ஒன்றை பாடுவதற்காக தமிழ் ஈழ பாடகி கிலியோ என்பவருக்கு டி இமான் வாய்ப்பளித்துள்ளார். இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.