குழந்தைக்கு கூகுள் என்று பெயர் வைத்த பெற்றோர்…!!

இந்தோனேஷியாவில் எல்லா கரின் (வயது 27), ஆன்டி சாஹ்யா சாபுத்ரா (வயது 31) என்ற தம்பதியர் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்துள்ளது ஆச்சரித்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் பிறந்த இந்த குழந்தைக்கு பெயர் வைக்காமல் பெற்றோர்கள் இருந்த நிலையில், தொழில்நுட்ப சம்பந்தமான பெயரை வைக்க வேண்டும் என்று தேடி வந்துள்ளனர்.

இதனால் மூன்று மாதம் காத்திருந்த இந்த தம்பதிகள் கூகுள் என்று பெயர் வைத்து அசத்தியுள்ளனர்.

கூகுளை போல தங்கள் மகனும் எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று பெற்றோர் விரும்பி அப்பெயரை வைத்துள்ளனராம். மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக தங்கள் மகன் வாழவேண்டும் என்றும் அதற்காகவே இப்பெயரிட்டோம் என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.

ஆகவே, அப்பையனின் பெயர் ‘கூகுள்’ என்பது மட்டுமே. பின்னால் எந்தப் பெயரை சேர்த்தாலும் இப்பெயரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடும் என்பதால், துணை பெயர் எதையும் சேர்க்கவில்லை என்று ஆன்டி தெரிவித்துள்ளார்.