தமிழ் நடிகர்கள் நடித்துள்ள தெலுங்கு படம்..!!

தமிழில் ஐந்து ஆறு இயக்குநர்கள் இணைந்து ஓடிடி தளத்தில் வெப் சீரிசாக வெளியிடப்பட்டு வரும்
ஆந்தாலஜி வகைப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் நல்ல லாபம் வருவதாகக் கருதுவதால் நடிகர்கள் சில ஓடிடி தளத்தை உருவாக்கி அதில் படத்தை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில், அல்லு அரவிந்த்’’ ஆஹா’’ என்ற ஓடிடி தளத்தை துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில்
அத்தம் ஆந்தாலஜி என்ற படத்தையும், அவர் வெளியிடுகிறார்.

இந்தப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா,ரோகினி, ஜெயப்பிரகாஷ்ய் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 16 ஆம் தேதி அல்லு அரவிந்த்தின் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.