நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
துளசி இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் இதனால் அதிகரிக்கிறது. துளசி இலைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அந்த அந்நீரில் ஒரு கிளாஸ் நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சளியை குணப்படுத்துகிறது:
துளசியில் இருக்கும் கிருமிகளை எதிர்க்கும் தன்மை, சளியை குணப்படுத்துகிறது. துளசியை ஒரு கைப்பிடி எடுத்து, நன்றாக கழவி, நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த நீரை தொடர்ந்து அருந்துவதும், அல்லது கொப்பளிப்பதும், சளி மற்றும் கபம் குறைய நல்ல தீர்வாகும்.
கல்லீரலுக்கு நல்லது:
துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடென்ட் தன்மையால், கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி , கொழுப்பு சேருவதைக் குறைக்கிறது. இதனால் கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகள் குறைகிறது. தொடர்ந்து துளசியை உட்கொள்வதன்மூலம் கல்லீரலில் நச்சுகள் வெளியேறி பாதுகாக்கப்படுகிறது.