விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் சிறு, சிறு வேடத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பின்னர் தமிழகம் முழுதும் பிரபலம் அடைந்தார்.
பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்ட பின்னர் சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ஆர்யா மற்றும் ஆயிஷா இணைந்து நடித்துள்ள ‘டெடி’ என்ற படத்தில் சாக்ஷி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றார். மேலும், பாலிவுட் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் விதமாக சாக்ஷி இணையத்தில்கவர்ச்சி காட்டி வருகின்றார்.
நடிகை சாக்ஷி சமீபகாலமாக கடுமையாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தனது உடலை சிக்கென மாற்றி வைத்துள்ளார்.
இந்நிலையில், சாக்ஷி வெளியிட்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் கழுவி ஊற்றி கமெண்ட் செய்து வருகின்றனர்.