தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இன்னொரு பெயரும் இவருக்கு உண்டு.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளத்திலும் இவர் டாப்பில் தான் உள்ளார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் காதல் காட்சி நடித்தோம், பாட்டுக்கு நடனம் ஆடினோம் என்றில்லாம் கதை பேசும் படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
அதில் வெற்றியும் கண்டார், இப்போது அவர் படம் என்றாலே கதை முக்கியமாக இருக்கும் என்கிற எண்ணம் ரசிகர்களிடம் வந்துவிட்டது.
35 வயதாகியும் நயன்தாரா மிகவும் பிட்டாக இருக்கிறார், அதற்கு அவர் என்ன செய்கிறார் தெரியுமா?.
உடலமைப்பை சரியாக வைப்பதற்காக யோகா, கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சிகள் மற்றும் ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்கிறாராம். அத்துடன் மேலும் ஒரு சிறப்பான டயட் உணவையும் ஃபாலோ செய்வாராம் நயன்தாரா.