16 பிக்குகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்..!!

காலி அஹங்கம பிரதேசத்திலுள்ள விகாரையைச் சேர்ந்த 16 பிக்குகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காலி அஹங்கம பிரதேசத்திலுள்ள விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவர் அண்மையில் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின் மினுவாங்கொடவில் கொரோனா பரவல் ஏற்பட்டதனால் விகாரையிலுள்ள அனைத்து பிக்குமார்களும் தனிமைப்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.

காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையின் ஆய்வகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர் சிரிவர்தன தெரிவித்தார்.