சென்னை திருவள்ளிக்கேணியில் உள்ள வி.ஆர் பிள்ளை தெருவில் வசித்து வருபவர்ன் நடிகர் பாலாஜி(37) .இவர் சேவற்கொடி, சும்மாவே ஆடுவோம்,விசிறி சேவற்கொடி, அட்றாமச்சா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் நடிப்பதுடன் மீன் வியாபாரமும் செய்து வருகிறார்.
இவரது வீட்டில் கிழ் தளத்தில் இவரும் இவரது தாயும் வசித்து வந்தனர். முதல் தளத்தில் வீட்டு புனரமைப்பு வேலைகள் நடந்து வந்தன. அருண் பாஅலாஜி சமீபத்தில் ஊருக்குச் சென்றுவிட்டு வீட்டிக்கு நேற்று முன் தினம் திரும்பினார்.
அப்போது இவர் வீட்டில் வைத்திருந்த ரூ. 50 லட்சம் பணம் 5 பவுன் நகைகள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீஸார் பெயிண்டிங் வேலை செய்து வந்த மணிகண்ட்ன, இளக்கோவன் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள் ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்ததாகக் கூறினர். போலீஸார் மேலும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.