ஒரே நாளில் இத்தனை பேரா?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள லஷ்மி பாம் ட்ரைலர் இணையத்தில் சாதனை நிகழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.

அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’. இப்படத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் ‘காஞ்சனா’ என்ற பெயரிலும் பிறகு ‘காஞ்சனா-2 ‘ என வெளியான அனைத்து பாகங்களிலும் லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து ஹிட் கொடுத்தார்.திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி , காஞ்சனா, காஞ்சனா 1 , காஞ்சனா 2, காஞ்சனா 3 என அத்தனை படமும் வசூலில் சாதனை செய்தது.

தமிழ், தெலுங்கை தொடர்ந்து காஞ்சனா திரைப்படம் தற்ப்போது இந்தியில் அக்சய் குமாரை வைத்து லட்சுமி பாம்
படத்தை லாரன்ஸ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் சற்றுமுன் யூடியூபில் வெளியாகி பாலிவுட் ரசிகர்களை மிரட்டி எடுத்துள்ளது.

இந்நிலையில் அந்த ட்ரைலர் வெளியாகி ஒரே நாளில் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது இந்தியாவில் இதுவரை நிகழாத சாதனையாகும்.