தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றதுடன், 300 கோடிக்கும் வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார், இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பத்ரி, இப்படத்தில் தல அஜித்தை வைத்து 4 திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவாவும் நடித்துள்ளார்.
ஆம் அப்போது இயக்குனர் சிறுத்தை சிவா அப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளாராம். மேலும் அப்படத்தில் தளபதி விஜய்யுடன் ஒரு காட்சியிலும் நடித்துள்ளார்.
Damn! Did I just see director Siruthai Siva in Badri's making scenes?😂 pic.twitter.com/pHPjNrKZLp
— Ian Malcolm (@MrIanMalcolm) October 10, 2020