பாடலாசிரியர் விவேக்கை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த மீம்! இதோ பாருங்க

ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் அனைவர் மத்தியில் மெர்சல் காட்டியவர் பாடலாசிரியர் விவேக். தொடர்ந்து விஜய்யின் படங்களில் பணியாற்ற அவரின் பின்னால் ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அண்மையில் வர்மா படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இப்படமே முதலில் எடுக்கப்பட்டது என்றாலும் சில விசயங்களை வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இப்படத்தை ஆதித்ய வர்மா என எடுக்கப்பட்டு முதலில் வெளியிடப்பட்டது.

ஆதித்ய வர்மா படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய பாடல் கண்ணிலே கண்ணீரிலே என்ற பாடல் அனைவரையும் ரசிக்க வைத்து ஹிட்டானது.

இப்பாடலை ரசிகர்கள் நாயை வைத்து மீம் செய்ய வேடிக்கையாக இருந்தது. இப்படத்திலும் பாடல்கள் எழுதியுள்ள விவேக் அந்த மீம் ஐ பார்த்து வயிறு குலுங்க சிரித்திருப்பதை டிவிட்டரில் அவரின் பதிவு சொல்கிறது.