துபாய்யில் கையில் கேமராவுடன் செம ஸ்டைலாக புகைப்படம் எடுக்கும் தல அஜித்..!!

தல அஜித் குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார், இவருக்கு தமிழகம் முழுவதிலும் நம்பமுடியாத அளவு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு மாஸ் திரைப்படங்களில் வெளியனது. அந்த இரண்டு திரைப்படங்களும் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் படப்பிடிப்பும் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆரம்பம், இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தல அஜித் கேமராவில் துபாய் நகரத்தை புகைப்படம் எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது அவரின் ரசிகர்களிடையே மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.