பிக்பாஸ் சீசன் 4ல வத்திக்குச்சி இவரு தானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் மூதல் வாரத்தை கடந்துவிட்டது. இந்த வாரம் போட்டியாளர் வெளியேற்று படலம் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமே.

ஆனாலும் முதல் வாரமே, வார்த்தை சண்டை, சச்சரவு, மோதல், சமாதானம், உணர்ச்சி வசம் என தொடர்ந்து வருவதை காணமுடிந்தது.

அதிலும் அறந்தாங்கி நிஷா ரேகாவை மிகவும் கலாய்ப்பதும், ஆனால் ஒரு ஹீரோயினான ரேகா கோபம் கொள்ளாமல் நிஷாவின் பேச்சுக்கு அமைதியாக சகித்து செல்வதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

கிச்சனில் பாத்திரம் துலக்கும் நார் நிஷாவிடம் உள்ளது சூசகமாக சுரேஷ் நிஷாவின் தலைமுடி குறித்து கிண்டலடிக்க விவரம் புரியாமல் ரேகா நிஷாவிடம் சென்று நார் கேட்க இடையில் ஒரு விவாதம் ஓட ரம்யா பாண்டியன் இந்த சீசன் வத்திக்குச்சி என கிண்டலடிக்கிறார்.

Unseen Story ல் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.