இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நாடுமுழுவதும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்துள்ளதால், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் மாஸ்டர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் யூடியூபில் 200 மில்லியன்க்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
குட்டி ஸ்டோரி – 74.3 மில்லியன்
வாத்தி கமிங் – 81.4 மில்லியன்
வாத்தி ரைட் – 19.4 மில்லியன்
அந்த கண்ண பாத்தாக்க – 12.2 மில்லியன்
பொல்லாக்கட்டும் பர பர – 6.8 மில்லியன்
மாஸ்டர் Jukebox – 5.8 மில்லியன்