இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் மாஸ்டர். படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, நெய்வேலி என நடந்தது.
படப்பிடிப்பு தளங்களில் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூடிய வீடியோக்கள், புகைப்படங்கள் என நாம் நிறைய சமூக வலைதளங்களில் பார்த்தோம்.
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மிகவும் சிம்பிளாக மார்ச் 15ம் தேதி பெரிய ஹோட்டலில் நடந்தது. ரசிகர்கள் மாஸ்டர் ரிலீஸுக்காக ஆவலாக வெயிட்டிங்.
இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.