5 வருடங்கள் கழித்து தனுஷுடன் மீண்டும் இணையும் முன்னணி பிரபலம்..!!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பால் கடந்த 18 வருடங்களாக முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர், தனுஷ்.

இவரின் நடிப்பில் காதலை கதைக்களமாக கொண்டு 2011ஆம் ஆண்டு வெளியான படம் 3. இப்படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதன்பின் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, மாரி உள்ளிட்ட படங்களுக்கும், தனுஷின் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களுக்கும் இசையமைத்து வந்தார்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தனுஷ் நடித்து வெளியான ஒரு படத்திற்கு கூட அனிருத் இசையமைக்கவில்லை. இதற்கு அவர்களுக்கு இடையே ஏற்ப்பட்டு உரசல் தான் காரணம் என்றும் சில தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இந்த கூட்டணி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் D44 படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி தனுஷ் மற்றும் அனிருத் இருவரின் ரசிகர்களுக்குஇடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.