நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர்கள் சூர்யா-கார்த்தி. ஆனால் இவர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள பெரிய உழைப்பை போட்டுள்ளார்கள்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் தங்களது நிறுவனம் மூலம் நிறைய உதவிகள் செய்கிறார்கள். இந்த நிலையில் தான் இவர்கள் இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதுவரை அவர்களது நிறைய புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம், ஆனால் இது புதியது, வெளிவராத ஒரு புகைப்படம்.
சூர்யா, கார்த்தி மற்றும் ஒருவருடன் இருக்கும் இளம் வயது புகைப்படம், மற்றொன்று சூர்யா தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம், இதோ பாருங்க,